430. இராகம்: காம்போதி ரூபக தாளம்
பல்லவி
ஆரிடம் போவேன்
நான் அவதிகள் மிகுந்திடில்
ஆதரிப்பாய் என்னை ஐயனே
அனுபல்லவி
பாரினில் உனையல்லால் பாவிக்கோர்
துணையுண்டோ
யாருமில்லையே கண் பாருமெனை
யென்நாதா - ஆரிடம்
சரணங்கள்
1. சித்தம் இரங்காதோ திருவுள்ளம் கனியாதோ
தினம் தினம் படும் பாடும் தீராதோ
அத்தனே[1] என்பிழை
அத்தனையும் பொறுத்
தாண்டு இரட்சித்தருளுவாய் அன்பே என் ஆருயிரே
- ஆரிடம்
2. சோதனையனுதினம் நூதனமாய் வருதே
சொல்லிமுடியாத் துயர் தருதே
நாதனே போகும் வழி ஏதும் காணேனே ஐயோ
வேதனே வெற்றி வழி விளங்கிடச் செய்திடாயோ
- ஆரிடம்
- அருள்திரு. வி.டி.
சகாயம்
No comments:
Post a Comment