13 March 2026

ஆர் இடத்தில் ஏகுவேன் நான் ஆதரி ஐயா

ஞா.கீ:197

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

197. இராகம்: சாவேரி                                     செம்படைதாளம்

 

                             பல்லவி

 

                   ஆர் இடத்தில் ஏகுவேன் நான்? ஆதரி, ஐயா,

 

                             அனுபல்லவி

 

          தாரகமாய் நீசர் உற்ற சாபம் மாற்றிட வந்த சகாயா, - ஆர்

 

                             சரணங்கள்

 

1.         அலகை[1] மடங் கவடித் தோட்டின ஜெய கிறிஸ்

            தையனே, உனை நம்பினேன்;

            மலைவு[2] கொளும், எனக்குன் பாதமே கதி அல்லால்,

            மற்றொரு துணை இல்லையே, பரனே இனி - ஆர்

 

2.         அணுக ஈனவரை வரவழைக்கும் மனோகரா,

            அடியனை அரவணைத்தாள்;

            பணிவுடன் உனதடி சேர்ந்து, சரண் புகுந்த

            பாவியை நீ கைவிடாமல், அனுக்ரகி - ஆர்

 

3.         முடிவு வரை நடத்தி ஆண்டு ரட்சிக்க எனை

            முழுதுமே கை அளித்தேன்;

            அடிதொளும் பலவினை சூழ்ந்திடும் பொழுதெல்லாம்

            ஆதரிப்பதுனது மேல் உற்ற பாரமே - ஆர்

 

- ஜாண் பால்மர்



[1] பிசாசு

[2] வருத்தம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...