38. இராகம்: லாவணி ஆதிதாளம்
(388)
பல்லவி
ஆதம் செய்த
பாதகம் தொலைய மன்றாடி
அனுக்கிரகமாகவே
திருக்குமாரனும் நீடி - ஆதி
அனுபல்லவி
விதப் பரம போதன்-உயர்
மேன்மைக் கிறிஸ்து நாதன்,
வெகு கோடிப் புகழ் பாடி, தூதர்
கூடி,
கொண்டாட நாடி சந்தானே - ஆதம்
சரணங்கள்
1. மன்னன் தவீது குல கன்னி மரியினிடமாக
மனுடர்களில் அதிக பிரியம் உற, வினைகள்
போக,
திருவானே தருகுவானே; சுய
திரு உருவானே,
மலையானே, கலையானே,-மலைச்
சார்பில் பெத்தலேம் ஊரினில் பிறந்தானே
- ஆதம்
2. அகத் துதித் தொளிர் திருத்துவத்தி லொன்றானே,
அனைத்துலகமும் வகுத்துக் காத்து நின்றானே
மா மகத்வ இம்மானுவேலே, மன
பிரிய மிகுதியாலே
மனுவாக, வினைபோக,-பசு
மாட்டுக் கொட்டிலில் காட்டினில் பிறந்தானே
- ஆதம்
- வே.சா
No comments:
Post a Comment