24 March 2026

ஆச்சரியமான காட்சியைப் பார்க்கலாம் வா

ஞா.கீ:105

To Download Txt Lyrics file

 

105. இராகம்: வராளி                                                ஏகதாளம் (410)

 

                             பல்லவி

 

                    ஆச்சரியமான காட்சியைப் பார்க்கலாம்,

                        வா, ஆ! கல்

                        வாரிச் சிலுவையில் வானவன் தொங்குகின்ற

                        ஆச்சரியமான காட்சியைப் பார்க்கலாம், வா

 

                             அனுபல்லவி

 

            சூட்சமுறு தேவ காட்சியாங் கற்பனை

            துய்யத்தை நரர்மீறி-மகா

            துர்குணப் பேயின் தந்திரத்தினால்

            தூய்மை விட்டனர், வாய்மை கெட்டனர்

            சுத்தகிறிஸ்தரசன், தேவனுட

            சித்தன், அமை சிரசன், மாந்தர்களின்

            துன்பத்தைப் போக்கவும், இன்பத்தைச் சேர்க்கவும்,

            தோஷஞ் செய்பாதகன் வேஷமாய்த் தொங்குகின்ற - ஆ

 

                             சரணங்கள்

 

1.         எருசலை நகர் மருவுங் கல்வாரி

            என்னப்பட்ட ஒரு மேடு-அதில்

            ஏசுக்கிறிஸ் தெனும் நேசமகத்துவன்

            எங்களுக்காய்ப்படும் பாடு-மரக்

            குருசில் ஏறியே சிரசில் முண்முடி

            கொண்டதும் நொந்ததும் நீடு;-அப்போ

            கொற்றவன் தன் முகம் சற்றேனுன் காட்டாத

            குறையதும் ஒரு பீடு;

            குருதி வடியவே, சுருதி முடியவே

            பருதி மறையவே திரையுங் கிழியவே,

            கொலைஞர் அவமதிக்க,-துஷ்டனாம்

            அலகை மனங்கொதிக்க, கசப்புடன்

            கோனே, என்னை நீர் ஏனோ கைவிட்டீர்?

            கொடுக்கிறேன் ஜீவனை, எடுத்திடு மென்றழும் - ஆ

 

2.         பூலோகத்தாரே, இம்மேலான காட்சியின்

            புண்ணியத்தை வந்து பாரும்,-தேவ

            புத்திரன் பக்கத்தில் குத்துண்டு பாய்கின்ற

            புனித ரத்தமும் நீரும்-நம்மை

            மேலோகஞ் சேர்க்கின்ற சாலக்கிருபையின்

            விஸ்தார ஊற்றென்று சேரும்;-அதில்

            விழுந்து ஆத்மம் முழுகிப் பாவந் தீ

            வினை அகன்றிட வாரும்

            சீலமற்ற மாந்தர் கோல முற்ற வேந்தர்

            ஜீவனதிபதி சாவினாலே நம்மைத்

            தெய்வ லோகஞ் சேர்க்க-நித்தியமாய்

            உய்யும் சுத்தோராக்க, சுத்த பிதா

            செல்வக் கிறிஸ்தந்தக் கல்வாரி மேட்டினில்

            ஜீவன் துடிக்கதத்தம் ஆவி விடுகின்ற - ஆ

 

 

- ஜி.யோ

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...