265. இராகம்: சங்கராபரனம். தாளம்: ஆதி
“என்ன பாக்யம்” - என்ற மெட்டு
பல்லவி
ஆசீர்வதியும்
- சுவாமி என்னை
ஆசீர்வதியும்
அனுபல்லவி
ஆசீர் வதித்தாலே அல்லாது நான்விடேன்
நேசா நின்வாக்கெல்லாம் நினைத்துஇப் போதேநீர்
- ஆசீர்
சரணங்கள்
1. இயேசா வைப்போலே - சுதந்தரம்
இழந்தஎன் மேலே
கூசாது கைவைத்துக் குற்றங்கள் மன்னித்து
ஆசீர்வ தியுமென் ஆண்டவா, தேவாநீர் - ஆசீர்
2. கவிழ்ந்தே நிற்கின்றேன் - துணிந்தே என்
காத்தாவை யான்நோக்கேன்
பவம்நீக்கப் பிணைப்பட்டு பாடுகள் பட்டஎன்
பரிசுத்த மீட்பரே பவம்நீக்கி என்னைநீர்
- ஆசீர்
3. நெஞ்சைநீர் மாற்றும் - வாக்குப்போல்
நித்தம்காப் பாற்றும்
கெஞ்சும்என் விண்ணப்பம் கேளும்மா கிருபையாய்
அஞ்சிகை என்நெஞ்சில் ஆண்டவா தாரும்நீர்
- ஆசீர்
4. மாசில்லா வாயன் - நேற்றின்றென்றும்
மாறாத நேயன்
ஆ! சிறி யோரைநீர் ஆசீர்வ தித்தீரே
அவ்வாறே என்னையும் ஆசீர்வ தித்திடும்.
- ஆசீர்
No comments:
Post a Comment