23 March 2026

ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே

புத்தெழுச்சி:434

 

 

Youtube Link

 

Text file Download

 

 

 

1.       ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே

            நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே

 

                        வீசிரோ வானஜோதி கதிரிங்கே

                        மேசியா எம் மணவாளனே

                        ஆசாரியரும் வான் ராஜனும்

                        ஆசீர் வதித்திடும்.

 

2.         இம்மண மக்களோடென்றும்

            என்றென்றும் தங்கிடும்

            உம்மையே கண்டும் பின் சென்றும்

            ஒங்கச் செய்தருளும்

            இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே

            இன்பத் தோடன் பாக்கி சூட்சமே

            உம்மிலே தங்கித்தரிக்க

            ஊக்கமருளுமே - வீசிரோ

 

3.         ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக

                        நீர் நின்றே

            பற்றோடும் மீது சாய்ந்துமே

                        பாரில் வசிக்கவே

            வெற்றி பெற்றோங்குமே இவர்

                        நெஞ்சத்திலே

            வீற்றாளும் நீர் ஏசுராஜனாம்;

            உற்றவான் ராயர் சேயர்க்கே

            ஒப்பாய் ஒழுகவே - வீசிரோ

 

4.         பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே

            ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்

            மாதிரளாக இவர் சந்ததியார்

            வந்து துதித்தும்மை பிரஸ்தாபிக்க

            ஆ தேவ கிருபை தீர்மானம்

            ஆம்போல் அருளுமேன் - வீசிரோ

 

 

- ஆபிரகாம் பண்டிதர்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...