23 March 2026

ஆசீர்வாதத்தின் உறைவிடமே

பாடல்

To Download Txt Lyrics file

 

                   ஆசீர்வாதத்தின் உறைவிடமே

                        எந்தனுள்ளத்தின் ஆனந்தமே

                        அப்பனே கிருபை செய்யுமே

                        அடியார் விண்ணப்பம் கேளுமே

 

1.         ஊற்றும் உமதாவிதனை

            ஆவியின் அருள் பிரவாகத்தையே

            ஊற்றியே எம்மைத் தேற்றிடுமே

            என் பாத்திரம் பொங்கிவடியுதே - ஆசீர்

 

2.         பெந்தெகொஸ்தே நாளின் முன்மாரி

            பெய்ய பண்ணின விதமாக

            அந்நிய நாளாம் இவ்வேளையிலே

            பின்மாரி பெய்யப் பண்ணுமே - ஆசீர்

 

3.         அக்கினி நாவுகள் பிரிந்து

            அற்புதங்கள் மிகச் செய்தாரே

            அக்கினியால் அடியாரையும்

            முற்றும் மறுரூபமாக்கி விடும் - ஆசீர்

 

4.         அப்பா ஆசீர்வதித்திடுமே

            முத்திரையாம் ஆவி பெற்றிடவே

            அப்போஸ்தலருக்கு கீந்தபடி

            அப்பனே அருள் புரிந்திடுமே - ஆசீர்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...