23 March 2026

ஆசீர்வாதமான மழை பொழியட்டும்

நிஜீ.கீதங்கள்:469

To Download Txt Lyrics file

 

                   ஆசீர்வாதமான மழை பொழியட்டும்

                        அபிஷேக ஆவி மழை ஊற்றட்டும்

                        பரிசுத்தர் இயேசுவே பரலோகம் திறந்திடும்

                        புதிய கிருபையால் என்னை நிரப்பிடும்

 

1.         வனாந்திரம் வயல் வெளியாய் மாறட்டும்

            வற்றாத நீரூற்று தோன்றட்டும்

            வாதை நோய் ஒழிந்திட

            வாழ்வெல்லாம் செழித்திட

            பாதையெல்லாம் இன்று

            நெய்யாய் பொழிந்திடும் - ஆசீர்

 

2.         கடன் தொல்லை கஷ்டமெல்லாம் தீரட்டும்

            கண்ணீரெல்லாம் களிப்பாய் மாறட்டும்

            துன்பங்கள் மறைந்திட

            இன்பங்கள் நிறைந்திட

            உன்னதத்தின் ஆசீர்வாதம் இறங்கட்டும்

 

3.         அடைக்கப்பட்ட வழிகளெல்லாம் திறக்கட்டும்

            உடைந்த என் இதயத்தை ஆற்றிடும்

            என் முன்னே சென்றிடும்

            தடைகளைத் தகர்த்திடும்

            எனக்காக யுத்தம் செய்யும் இயேசுவே

 

4.         தேசமெங்கும் திருச் சபைகள் தோன்றட்டும்

            அணியணியாய் ஊழியர்கள் எழும்பட்டும்

            ஜெபத்தினால அசைந்திட தீவிரமாய் புறப்பட

            உபவாச வீரர்களை எழுப்பிடும் - ஆசீர்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...