23 March 2026

ஆசை நேசரே என் அன்பு நேசரே

நிஜீ.கீதங்கள்:2369

To Download Txt Lyrics file

 

                   ஆசை நேசரே! என் அன்பு நேசரே!

                        உச்சிதமான அன்பைச் சொரியும் நேசரே

                        ஆசை நேசரே...!

 

1.         பரலோகத்திலே உம்மையல்லால் யாருண்டு

            பூலோகத்திலே வேறு விருப்பம் இல்லையே

            என் மாமிசமும், இருதயமும்

            மாண்டு போனதே

            தேவன் என்றென்றைக்கும் என் பங்கானார்

            ஆசை நேசரே...!

 

2.         அதிகாலையிலே ஐயா உம்மை தேடுவேன்

            உம் நாமத்தின் மீதில் நான்

            தாகமாயிருந்தேன் (2)

            பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப் பார்க்க

            ஆசையாயிருந்தேன்

            உந்தன் வல்லமையும், மகிமையும்

            கண்டேன் ஆசை நேசரே...!

 

3.         துக்கத்தினாலே என் கண்கள் தொய்ந்ததே

            அனுதினம் நானே ஐயா

            உம்மைக் கூப்பிட்டேன் (2)

            மானானது நீரோடையை

            வாஞ்சித்தது போல

            எந்தன் ஆத்துமா உம்மை

            வாஞ்சிக்குதே ஆசை நேசரே...!

 

4.         எனக்காய் இழந்தீர் ஐயா

            எனக்காய் இழந்தீர்

            எல்லாவற்றையும் எனக்காய் இழந்தீரே (2)

            உம் அன்புக்கீடாய் நன்றியோடு

            என்னத்தைக் கொடுப்பேன் ஐயா

            என்னையே உமக்காகக் கொடுத்தேன்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...