23 March 2026

அன்பே அன்பே அன்பே ஆருயிருரவே

ஞா.கீ:463

 

 

Youtube Link

 

Text file Download

 

 

463. இராகம்: காம்போஜி                                 ஆதி தாளம்

 

பல்லவி

 

                   அன்பே! அன்பே! அன்பே! ஆருயிருறவே

                        ஆனந்தம்! ஆனந்தமே!

 

சரணங்கள்

 

1.         ஒரு நாளுந் தயை கண்டேனையா,

            அந்நாளெனை வெறுத்தேனையா

            உம் தயை பெரிதையா-என் மேல் - அன்

 

2.         அலைந்தேன் பலநாள் உமையுமறியா

            மறந்தே திரிந்த துரோகியாமென்னை

            அணைத்தீ ரன்பாலே-கரத்தால் - அன்

 

3.         விடுத்தீரே நீர் விண்ணுலகத்தை;

            எடுத்தீரே மா ஏழையின் கோலம்;

            கொடுத்தீரே உயிரை-எனக்காய் - அன்

 

 

 

4.         எந்தன் நாவால் இயம்பிடுவேனேன்

            அத்தனே உம்மாவன்பதன் மாண்பை

            நிதமும்! துதித்திடுவேன்

            உம்மையே நித்தமும்; துதித்திடுவேன்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...