ஆதியில் வார்த்தையாய் இருந்த எங்கள்
இயேசுவே
மனிதனை
மீட்க நீரே மண்ணில் வந்தீரே - 2
இருளில்
ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே
வழியாய்
வந்த இயேசுவே - 2
இயேசுவே
இம்மானுவேலரே
மனிதனை
மீட்க வந்த மகா பிரபுவே - 2
1. பொன்னை
கேட்கலை உன் பொருளையும் கேட்கலை
சொத்தைக்
கேட்கல உன் சம்பத்தைக் கேட்கலை - 2
உன்னை
கேட்கிறார் உன் உள்ளத்தை கேட்கிறார்
மகனாய்
உன்னை மாற்றுவார் - 2 - இயேசுவே
2. சாபத்தின்
கட்டுகளை உடைக்க வந்த இயேசுவே
எனக்காய்
சாபமானீர் சிலுவை மீதிலே - 2
பாவத்தின்
சம்பளத்தை நான் செலுத்த தேவையில்லை
இயேசு
செலுத்தி விட்டாரே - 2 - இயேசுவே
No comments:
Post a Comment