235. இராகம்: புன்னாகவராளி அடதாளம்
பல்லவி
ஆதியாம்
மகா ராஜனே,-எந்த வேளையும்
அடிய னோடிரும், ஈசனே
அனுபல்லவி
தீதில்லா சருவேசா, தேசுறும்[1] பிரகாசா,
பாதகன் யான் மிகு பலவீனன் ஆனதால், - ஆதி
சரணங்கள்
1. பாவி பெலனால், ஐயனே,-நின்றால் என்னைப்
பகைவர் ஜெயிப்பார், மெய்யனே;
தேவா, துணை நீர் ஐயனே;-சிறியனிடம்
சேர்ந்தே வசியும், துய்யனே[2],
மேவும் தஞ்சம் எனக்கு வேண்டும், காவலன்
நீரே;
சாவுவரையும் என்னைத் தாங்கி அரவணையும். - ஆதி
2. இரக்கம் பொழிய வாருமே,-கிருபையாக,
இறைவா, என்னிடம் சேருமே;
உருக்கம் நிறைந்த நீருமே;-அனவரதம்[3]
உந்தம் அருளைத் தாருமே;
செருக்காய் எம் மீதி கலோர்[4] சேதம்
செய்ய நினைக்கும்
திருக்கை[5] அகற்றி
என்னில் தினமும் அருள்புரியும். - ஆதி
3. என்தன் மரண மட்டுமே-அருகில் நீரே
இருந்தால் மகா இஷ்டமே
எந்த அகிதர்[6] கெட்டுமே-இமைப்பொழுதில்
ஏகிப் போவார் திட்டமே;
தந்தை சுதன் நீரல்லால் தஞ்சம் வேறாரும்
இல்லை;
விந்தைமேவும் கதியில் மேன்மையுடன் வாழ்கவே!
- ஆதி
- ச. யோசேப்பு
No comments:
Post a Comment