27 March 2026

ஆராதனை ஆராதனை அப்பாவுக்கே இயேசு அப்பாவுக்கே

நிஜீ.கீதங்கள்:2436

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆராதனை ஆராதனை அப்பாவுக்கே

                        இயேசு அப்பாவுக்கே - 2

                        நல்லவரும் நன்மை செய்பவரும் அவரே

                        நம்பி வரும் அனைவரின் நம்பிக்கையும் அவரோ

 

1.         என்னை தம் உள்ளங்கையில் வரைந்தவர் அவரே

            என் உருவம் இன்னதென்று அறிந்தவர் அவரே - 2

            கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவர் அவரே

            கரம் பிடித்து நடத்திடும் கர்த்தரும் அவரே - 2 - ஆராதனை

 

2.         வனாந்திரத்தில் என்னை கண்டவரும் அவரே

            வஸ்திரத்தினால் என்னை மூடினவர் அவரே - 2

            ரத்தம் கொண்டு என் பாவம் போக்கினவர் அவரே

            இரட்சிப்பின் சந்தோஷத்தினால் அலங்கரித்தவர் அவரே - 2 - ஆராதனை

 

3.         மறுபடி உலகினில் வருபவர் அவரே

            தம் ஜனத்தை தம்முடனே இணைப்பவர் அவரே - 2

            நித்தியமாய் வெற்றி தருபவர் அவரே

            நித்தியமும் தம்முடனே வைத்திடுவார் அவரே - 2 - ஆராதனை

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...