23 March 2026

ஆ இயேசுவே நீர் எங்களை-1

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

298. (1 L.) சங்கராபரணம்                                ரூபகதாளம்

 

                             கண்ணிகள்

 

1.         ஆ இயேசுவே நீர் எங்களை

            அன்பாய்ச் சேர்ந்துமதாவியை

            அருள் அனுகிக்ரகத்தையும்

            தந்தெங்கள் மேய்ப்பராயிரும்

 

2.         வாய் உம்மைப் போற்றி,

            மனது தெய்வன்பை நன்றாய்

            யோசித்து உணர்வும் விசுவாசமும்

            பலக்கக் கட்டளையிடும்.

 

3.         ஒன்றாக ஆண்டிருக்கிற

            த்ரியேக தெய்வமாகிய

            பிதா குமாரன் ஆவிக்கும்

            தோத்திரமே உண்டாகவும் ஆமென்.

 

(திருநெல்வேலி திருமண்டல பாடல்)

 

1.         ஆ யேசுவே நீர் எங்களை

            அன்பாகச் சேர்ந்துமதாவியை

            நேயா அருள் அனுக்ரகத்தையும்

            நிமலா தந்து காரும்.

 

2.         பரந் தன்னில் நீர் பரிசுத்தர், மா

            பரிசுத்தர், மா பரிசுத்தரே,

            பரனே சேனைப்பரனே என்று

            பகர்ந்தே பார்க்குமளவும்.

 

3.         வாயும் மையே போற்றி எங்கள்

            மனம் நின் அன்பை ருசிக்க நற்ச

            காயா விசுவாசந் தந்து

            காரும் எம்மைப் பாரும்.

 

4.         மூவாட் களாய் ஒரு வஸ்துவாய்

            மூலோகமும் ஆளும்பரா

            தேவா தந்தை சுதனாவியே

            தினமுந்துதி உமக்கே.

 

 

- ஞா. சாமுவேல்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...