04 March 2024

தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே

தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே

                        துதிகள் நடுவே கர்த்தர் தங்க

                        தூதர் சேனை நம் மகிமையோடிறங்க

 

1.         எழும்பு சீயோனே ஒளி வந்ததே

            எரிந்திடும் விளக்கே திருச்சபையே

            காரிருளே கடந்திடுதே

            கர்த்தரின் பேரொளி வீசிடுதே

 

2.         நலமுடன் நம்மை இதுவரையும்

            நிலை நிறுத்திடுதே அவர் கிருபை

            கண்மணி போல கடைசி வரை

            காத்திடும் பரமனை வாழ்த்திடுவோம்

 

3.         குறித்திடும் வேளை உயர்த்திடுவார்

            கிறிஸ்துவின் கரத்தில் அடங்கிடுவோம்

            தாழ்வில் நம்மை நினைத்தவரை

            வாழ்வினில் துதித்திட வாய் திறப்போம்

 

4.         தெரிந்தெடுத்தார் தம் மகிமைக்கென்றே

            பரிந்துரைத்திடுவார் நாம் பிழைத்திடுவோம்

            இரட்சிப்பினால் அலங்கரித்தார்

            இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம்

 

5.         பெருந் தொனி கேட்க ஏறிடுவோம்

            பரலோகந் திறந்தே அவர் வருவார்

            உன்னதத்தில் உயர் ஸ்தலத்தில்

            என்றென்றும் அவருடன் வாழ்ந்திடுவோம்

 

https://www.youtube.com/watch?v=VrJFmylBowU

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...