14 March 2024

கடும் புயலில் கர்த்தர் அமைதி தந்தார்

கடும் புயலில் கர்த்தர் அமைதி தந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   கடும் புயலில் கர்த்தர் அமைதி தந்தார்

                        அவர் கட்டளைக் கேட்டதும் காற்றடங்கும்

                        நடுக்கடலில் அவர் சீஷர்கள் வேண்டிட

                        நல்லிரவின் நண்பன் ஆதரித்தார்

 

1.         படகில் தலைசாய்த்து உறங்கிடும் இயேசு

            கடலின் அலைகளின் மேல் நடந்தார்

            சர்வ அதிகாரம் உடையவர் கிறிஸ்தேசு

            சோதனை நேரம் உன்னை காத்துக்கொள்வார் - கடும்

 

2.         கர்த்தர் அறியா ஏதும் வராது

            கர்த்தரோ நல்லவர் தீமை செய்யார்

            நன்மைக்கேதுவாய் யாவும் நடக்கும்

            நம்பிக்கையோடு ஜெபித்திடுவாய் - கடும்

 

3.         இன்பமும் துன்பமும் உன்னை சோதிக்கும்

            ஒன்றையும் கண்டு நீ அசைந்திடாதே

            கிறிஸ்துவின் தேவனில் இணைந்து நிலைத்திரு

            கர்த்தரில் மகிழ்ந்தென்றும் பிழைத்திருப்பாய் - கடும்

 

- சாராள் நவரோஜி

 

 

https://www.youtube.com/watch?v=Tdx_Lslfgc8

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...