தேவாதி தேவனை இராஜாதி ராஜனை

தேவாதி தேவனை இராஜாதி ராஜனை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   தேவாதி தேவனை இராஜாதி ராஜனை

                        கர்த்தாதி கர்த்தனை தொழுகிறோம் - எங்கள் - 2

                        மூன்றில் ஒன்றாய் விளங்கும்

                        பரலோக திரியேக தேவனைத் தொழுகிறோம் - தூய

                        கிறிஸ்தேசு நாமத்தைத் தொழுகிறோம்

 

1.         அண்டசராசரம் அகிலமும்

            ஆண்டவர் படைத்தாரே - 2

            கைப்பிடி மண்ணினாலே - எம்மை

            கனிவோடு வனைந்தாரே

                        எம்மாத்திரம் என்னையும் - தேவன்

                        எண்ணி நினைத்திடவோ - 2 - தேவாதி

 

2.         சிந்தை குளிர்ந்திட பாடிடுவேன்

            சிந்தை குரு இயேசுவை - 2

            அருணோதயம் உதிக்கும்

            உள்ளம் அதிகாலை அன்பில் பொங்கும்

                        வளரும் விசுவாசமே - நித்தம்

                        வழிந்தோடும் தேவ அன்பே - 2 - தேவாதி

 

3.         நாச மோசம் ஒன்றும் நெருங்காமல்

            பாசமுடன் காப்பாரே - 2

            வேடன் கன்னி தப்பினால்

            வானம்பாடி பறவையைப்போல்

                        உயரே பறந்து இயேசுவின்

                        பாதம் பயமின்றி தங்கிடுவேன் - 2 - தேவாதி

 

- சாராள் நவரோஜி

 

 

https://www.youtube.com/watch?v=heMgIhL_OJA

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு