08 March 2024

கிருபா கரனே தோத்திர மையா இயேசு

கிருபா கரனே தோத்திர மையா இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

(இராகம்: கேதாரகௌளம்) (அடதாளகாப்பு)

 

                                    பல்லவி

 

          கிருபா கரனே தோத்திர மையா இயேசு (2)

            கிருபா கரனே

 

                                    அனுபல்லவி

 

                        தோத்திர மையா நித்ய தோத்திர மையா என்றும் (2)

                        கீர்த்தன மையா சங் கீர்த்தன மையா(ஹா)

 

                                    சரணங்கள்

 

1.         சருவே சுரனே தரும சாகரனே (2)

            திரியேக பரா பரனின் றிருமகனே(யே) - கிருபா

 

2.         பரலோ கணியே படியோர் பிணையே (2)

            மரியாளருள் மா தவ மா மணியே. - கிருபா

 

3.         யேசு நாயகனே ஏகமா கினனே (2)

            மேசியா சருவதரா தலவியா பகனே. - கிருபா

 

4.         தற்பர திரித்து வமே கிறிஸ்து வாந்த வமே (2)

            இஸ் பீரித்துச் சாந்துவி னாலயமே ஜெயமே. - கிருபா

 

5.         மூலாதி பாலா மெய் நூலா செங் கோலா மனு (2)

            வேலா சீலா அனு கூலா கோலா கலா. - கிருபா

 

6.         ஆதியான வனே அருள்வான வனே (2)

            வேத நாயகன் பாடலை மேவு வனே. - கிருபா

 

7.         இப்பார் கொரு சேய் இஸ்ரவேல்க் கரசே (2)

            அப்போஸ் தலரா ரிருபேர் சிரசே. - கிருபா

 

8.         அற்புத காரணனே அட்சய ஆரணனே (2)

            தற்பர சொரூப தயாபர பூரணனே. - கிரு

 

- வேதநாயகம் சாஸ்திரியார்

 

https://www.youtube.com/watch?v=eh2wBzGtmMM

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...