விசுவாசக் கப்பலில் யாத்திரையே

விசுவாசக் கப்பலில் யாத்திரையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          விசுவாசக் கப்பலில் யாத்திரையே

            வீரமுடன் செல்கின்றோம்

                        கப்பலின் மாலுமி கர்த்தர் இயேசு

                        கரை சேர்க்க வல்லவரே - 2

 

1.         அன்போடு தேவ அன்பில்

            அகமகிழ்ந்தே ஆர்ப்பரிப்போம்

            கலங்கரை ஜீவ ஒளி - நம்முன்

            கர்த்தர் பிரகாசிக்கின்றார்

                        அதோ சமாதான சாலேம் நகர்

                        வேகம் சுகமாக சேர்ந்திடுவோம்

 

2.         விசுவாசக் கப்பல் நடுக்கடல் சென்றும்

            வீசும் புயல் காற்றினால் சேதமில்லை - 2

            நம்பிக்கை நங்கூரம் இயேசுவே

            நம்மோடிருக்கின்றாரே - 2 - விசுவாசக்

 

3.         காற்றை கடலை அதற்றி அமர்த்தும்

            கர்த்தர் அதிகாரம் உள்ளவரே - 2

            புயலுக்குள் அமைதி தந்திடுவார்

            பயமின்றி பயணம் செய்வோம் - 2 - விசுவாசக்

 

4.         வடிவான சீயோன் துறைமுகம் பக்கம்

            வடதிசை இலக்கை நாம் நோக்கிச் செல்வோம் - 2

            பரலோகக் கூட்டம் நம்மை அரவணைத்து

            வரவேற்கக் காத்திருக்கும் - 2 - விசுவாசக்

 

- சாராள் நவரோஜி

 

 

https://www.youtube.com/watch?v=wvwesksM9wc

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு