தேவாதி தேவன் சிலுவை சுமந்தே

தேவாதி தேவன் சிலுவை சுமந்தே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   தேவாதி தேவன் சிலுவை சுமந்தே

                   பாவப் பலியாகிட சென்றார் - (எனக்காய்) - 2

                        கொல்கதா மலைமேல் ஏறிடும் காட்சி

                        காண்பவர் உள்ளம் உருகாதோ - உனக்காய்

                        மாண்டவர் அன்பை நினைப்பாயோ - தேவாதி தேவன்

 

          அன்பின் தெய்வம் கிறிஸ்து இயேசுவுக்கே மகிமை செலுத்தி அவர் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்! நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்  சிலுவையைக் குறித்து மாத்திரமே மேன்மைப் பாராட்டுகிறேன். இனி நான் அல்ல கிறிஸ்துவே எனக்குள் ஜீவிக்கிறார். பிரியமானவர்களே கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவே மெய்யான உலக இரட்சகராய் இருக்கிறார். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் பாவ மனுக்குலத்தை இரட்சிக்க இந்த மெய்யான தெய்வம் மனிதனாக அவதரித்து சிலுவையில் அறையப்பட்டார். நம்மை உண்டாக்கின ஒன்றான மெய்த்தெய்வம் பரிசுத்தமுள்ளவராக இருப்பதால், அவரை அடையும்படி நாமும் பரிசுத்தமாய் இருக்க வேண்டியது அவசியம். ஜென்ம கருமப் பாவங்களால் நமது சரீரமும் ஆத்துமாவும் குற்றமுள்ளதாய் இருக்கிறது. நம்மை பரிசுத்தமாக்க குற்றமற்ற தூய இரத்தம் தேவை. இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை. இயேசு கிறிஸ்து ஒருவரே பாவமற்றவராய் அவதரித்து வாழ்ந்து, தமது தூய இரத்தத்தை நமக்காக சிந்தி உயிர் கொடுத்தபடியால், அவர் ஒருவருக்கே நம்முடைய பாவங்களை மன்னிக்க சர்வ அதிகாரம் உண்டு. வேறு யாருக்கும் இந்த அதிகாரம் கொடுக்கப்படவில்லை. இவரே வழியும் சத்தியமும் ஜீவனும் ஆனவர்.

 

1.         பரிசுத்தமானவர் இயேசு - நம்மை

            பரலோகம் சேர்த்திட பாடுகள் ஏற்றார் - 2

            இவரேயல்லாமல் வழியேதும் இல்லை

            இரட்சண்ய பாக்கியம் பெறுவோமே - இவரால்

            இரட்சண்ய பாக்கியம் பெறுவோமே - தேவாதி தேவன்

 

          மனதில் பாவப் பாரமும் உலக கவலைகளும் நிரம்பி, சமாதானம் இழந்து தவிக்கும் மக்களே! இயேசு உங்களை நேசிக்கிறார். தம்மிடத்தில் வருகிற ஒருவரையும், அவர் புறம்பே தள்ளார், நீங்கள் அவர்மேல் விசுவாசம் வைத்து உண்மையோடும் உணர்வோடும் கனிந்த மனதோடும், உங்கள் பாவங்களையெல்லாம் இயேசு கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு ஜெபம் செய்தால் இன்றைக்கே பாவமன்னிப்பு, ஆத்ம சமாதானமும், பரம சந்தோசமும், மோட்ச பாக்கியமும், உங்களுக்கு கிடைக்கும்.  உங்கள் இருதயமே அவர் தூய ஆலயமாக மாறும். நீங்கள் அவரை ஆவியில் தரிசிக்கலாம். அவர் உங்களோடு அன்பாய் பேசுவதைக் கேட்டு மகிழலாம்.  இதுவே உங்கள் இரட்சிப்பின் நாள், இதுவே உங்கள் அனுக்கிரக காலம்.

 

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=QPabanVlcSc

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு