ஏறெடுப்பேன் என் கண்கள்
ஏறெடுப்பேன்
என் கண்கள்
என் ஆண்டவரின்
பரிசுத்த சமூகம்
- 2
எனக்கு
ஒத்தாசை வரும்
பர்வதங்கள்
ஏறெடுப்பேன்
என் கண்கள் - 2
என் ஆண்டவரின்
பரிசுத்த சமூகம்
ஏறெடுப்பேன்
என் கண்கள்
1. வானம் பூமி
யாவையும் படைத்தார்
வல்லமை
மிகுந்த சிருஷ்டிகரே
கர்த்தராலே
எனக்கு சகாயம்
(2)
கிருபையும்
கிடைத்திடுமே
(2) - நான் - ஏறெடுப்பேன்
2. உன் காலைத் தள்ளாடவொட்டார்
உன்னைக்
காக்கிறவர்
உறங்காரே
இஸ்ரவேலைக்
காக்கிற தேவன்
(2)
உறங்காரே
தூங்கிடாரே
(2) - நான் - ஏறெடுப்பேன்
3. நடுப்பகல்
தகனிக்கும்
வெயிலோ
நிலவோ இரவோ
பயங்கரமோ
சோதனைகள்
வாதைகள் உன்னை
(2)
சேதப்படுத்துவதில்லையே
(2) - நான் - ஏறெடுப்பேன்
4. போக்கையும்
வரத்தையும் காப்பார்
இது முதற்கொண்டு
என்றென்றுமாய்
ஆத்துமாவைக்
காக்கிற தேவன்
(2)
அவரையே
அண்டிக் கொள்ளுவேன்
(2) - நான் - ஏறெடுப்பேன்
- சாராள்
நவரோஜி
https://www.youtube.com/watch?v=gbPzek6wzq4
Comments
Post a Comment