07 March 2024

இயேசு சொன்ன பொன்மொழிதான்

இயேசு சொன்ன பொன்மொழிதான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                        ஆசியாவின் மேற்கேதான் யூதே நாடு

                        அதை ஆண்டு வந்தான் அன்றொரு நாள் தாவீது

                        தாவீதின் சந்ததியாம் சாகோப்பும்

                        தனக்கெனவே தேடிவிட்டான் நிபியாளை

                        நிபியாளின் வயிற்றினிலே சூசை பிறந்தான்

                        அந்த சூசையும் மரியாளும் இயேசுவின் பெற்றோர்

 

          இயேசு சொன்ன பொன்மொழிதான் உயிர்நாடி

            இதை ஏற்றுக் கொண்ட இதயங்களோ பலகோடி

            உலகில் பலகோடி

 

                        வருந்தி சுமை சுமப்பவர்களே வாருங்கள் என்னிடம்

                        யாம் உமக்கு ஆறுதல் அளிப்போம் (2) - இயேசு சொன்ன

 

1.         மாசில்லாத மனம் இருந்தால் போதும் என்றார் - இயேசு

            போதும் என்றார்

            அதை மதித்து நடந்து விட்டால் அதுவே தருமம் என்றார் - மனித

            தருமம் என்றார் - இயேசு சொன்ன

 

2.         அன்பு கொண்ட உயிர்களுக்கே தலைவன் என்றார் - இயேசு

            தலைவன் என்றார்

            என்றும் துன்பம் நீக்கி வாழ வைப்பார் இறைவன் என்றார் - இயேசு

            இறைவன் என்றார்

            பகைமை கொண்ட மனிதனிடம் பழகு என்றார் - இயேசு

            பழகு என்றார்

            பரம பிதா ஆண்டவனை வணங்கு என்றார் - என்றும்

            வணங்கு என்றார். - இயேசு சொன்ன

 

https://www.youtube.com/watch?v=y4BVMac87iQ

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...