ஐயையோ நான் என்ன செய்வேன் எந்தன்
கிறிஸ்து நாதர் பாடுகள்
தேவமாதா புலம்பல்.
இராகம் முகாரி
பல்லவி
ஐயையோ நான் என்ன செய்வேன் - எந்தன்
ஆதிதிரித்துவ ஜோதி தயாபரா
அடியாள் கொடுமை இதோ - எந்தன்
ஆதி திருத்துவ ஜோதி என் கண்மணி
அடியாள் கொடுமை இதோ
அனுபல்லவி
ஐயையோ நானென்ன செய்வேன் அநியாயக் கொடூரமதை
அடைந்து சகிப்பதற்கோ ஆனீரோ என் வயிற்றில்
அற்புத கண்மணி ஆனந்த சிரோமணி
அடியார் புவி ஞானி ஆகாய நிலையோ நீ
ஆறுமோ என் மனது தேறுமோ என்னுடலும் - ஐயையோ
சரணங்கள்
1. வயிற்றில் ஜெனித்தபோது மகனே நீர்தாம்
வழக்கம்போ லான துண்டோ
பயிற்று மறிவுகளை மானிடர் போல
பாவனை செய்த துண்டோ
பாராமல் சொல்லு வீரே பரம உலக ஞானம்
படித்த ஞானிக ளெல்லாம் பயந்து பிரமிப்பார்கள்
கற்ற கலைக்கியானி முற்றும் உலக ஞானி
மட்டளவற்ற ஞானி திட்டப் பரம ஞானி
என்றுபேர் பெற்ற நீரும் எங்கும்படி நிற்கவும் - ஐயையோ
2. உலகின் திசைகள் தோறும் உம் கீர்த்தி யெங்கும்
ஓடி விளங்கினதே
பலஊன் வியாதி குஷ்டம் பசாசுகளும்
பயந்த அலறி ஓட
அழகாய்
அதிசயங்கள் அற்புத
ரூபமாகி
அப்போ தப்போ
தெல்லாரும்
ஆச்சரியங்கள்
கொண்டு
ஆசையடர்ந்து
- பாசம் படர்ந்து
நேசம்
தொடர்ந்து - வாசம்
மலர்ந்து
அன்பை யணிந்த நீரூம் அந்தரத்தில்
தொங்கவும்
- ஐயை
3. எங்கே
பிடிக்கப்பட்டீர்
கெத்சேமனிடம்
அங்கே
ஏன் போனீர்
கோவே
தங்கி
முகமும் தாழ்த்தி
தலைகுனிந்து
தவசுக்கோ
போனீர் சுவாமி
பங்கமில்லாத
யூதாஸ் பாவியப்போது
உம்மை
பண்ண
நினைத்த சதி பாராமற் போனதென்ன
பார்த்துப்
பணத் தொகையை
காத்துமாய்
மாலமாக
சேர்த்துப்
பிடித்து வைத்துக்
கோர்த்துக்
கொடுத்துவிட
பறிகாரன்
போலக் கட்டி பாவியைப்போல்
நிற்பதற்கு
- ஐயை
4. எவ்வழி
போனாரேசு
எருசலேமின்
எப்பக்கம்
போனால் காண்பேன்
தவ்வி
விரைந்து போனால்
உன் மகனேசை
தலையோட்டிடத்தில்
காண்பாய்
கூவி மரியாள்
கத்தி குருசினிட
மட்டாக
கொண்டு
போர மகனைக்
கூப்பிட்டலறினாலும்
கொற்றவா
என் மகனே கிட்ட
வர மாட்டாயோ
தொட்டுப்
பிடிக்கு
முன்னே எட்டி நடக்கிறாயோ
திட்டமாய்
அங்கே நின்று திரும்பி
முகம் பாராயோ
- ஐயை
5. அன்னா
காய் பாவே
நீங்கள் - ஒருவருடன்
அண்டிப்
பிறக்கலையோ
சின்ன
உங்கள் வயிற்றில்
- ஜெனிக்கலையோ
சேர்ந்த
ஆண் பெண்களுமாய்
முன்னேவிட்
டெந்தன் கண்ணே
முறுக்கி
யடிக்கிறீரே
உன்னைப்
போல ஒருத்தி அவரைப்
பெறவில்லையோ
ஒப்புமோ
உங்கள் மனம் ஓங்கி
அடிக் கவரை
செப்புமோ
இந்த வார்த்தை
தேறுமோ என்னுடலும்
ஒன்றும்
செய்யாமல் கண்ணே
ஓட்டி விடுங்களையா
- ஐயா
6. கொண்டு
போகிறார் யூதர் - என்
மக னேசை
கொடுக்கப்
பிலாத் தேரோதும்
கண்டு
தரைகள் ஏகி-கலங்கெ
கேட்கக்
காரண
மில்ல யென்றான்
வண்டத் தனமாய்ப்
பிலாத்து
வாரினா லடிப்பித்து
திண்டு முண்டாய்க்
கொடுத்தான் திரண்ட
யூதர்கள்
கையில்
சிட்சைகள்
பண்ணியே சிலுவையில்
கொன்று
கொச்சைகள்
பேசியே கொடூரமாய்த்
துரத்தியே
நிச்சயமாக
நீரும் நிந்தை
யடையப் போனீர் - ஐயை
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment