அழைப்பின்
சத்தம் தொனிக்கும் நேரம்
வாருங்கள்
சேருங்கள் (2)
அழைக்கப்பட்டவர்
அதிகம் அதிகம்
கீழ்ப்படிந்தவர்
கொஞ்சம் கொஞ்சம் - அழைப்பின்
1. அறுப்பு
மிகுதி ஊழியர் கொஞ்சம்
எஜமான்
நம்மை ஜெபிக்கவே அழைக்கிறார் (2)
தானியேல்
போன்ற முழங்கால் தேவை
கண்ணீர்
கலந்த ஜெபங்கள் தேவை - அழைப்பின்
2. எழுபது
பேரை அழைத்த கர்த்தர்
உன்னையும்
என்னையும் அழைக்கிறார் அன்றோ (2)
பர்னபா,
பவுலைப் புறப்பட அழைத்தார்
அவர்களின்
சபையை அனுப்பிட அழைத்தார் - அழைப்பின்
3. காற்றைக்
கவனிப்பார் விதைப்பதும் இல்லை
மேகத்தைப்
பார்ப்பவர் அறுப்பதும் இல்லை (2)
வலைகளை
எறியும் விசுவாசம் தேவை
சபைகளைக்
கட்டும் தரிசனம் தேவை - அழைப்பின்
4. விளைந்த
பயிர்களை அறுத்திடும் நேரம்
இணைந்து
ஊழியர் உழைத்திடும் நேரம் (2)
இயேசுவின்
வருகை நெருங்கிடும் நேரம்
உலகத்தின்
முடிவு வந்திடும் நேரம் - அழைப்பின்
- எமில் ஜெபசிங்
No comments:
Post a Comment