22 March 2024

தேவப் பிதா தங்கும் சீயோனே

தேவப் பிதா தங்கும் சீயோனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          தேவப் பிதா தங்கும் சீயோனே

            தெரிந்தெடுக்கப்பட்ட தாபரமே

            பிதாவின் மகிமை அடைந்தவர்கள்

            சதா காலம் அங்கு வாழுவோம்

                       

                        பரன் சீயோன் மலை உயர் சிகரம்

                        புது எருசலேம் தேவ நகரம்

                        அது இறங்கியே வருகின்றதே

                        அங்கு இயேசு எம் சுதந்திரமே

 

2.         முன் குறித்தே எம்மை பேர் சொல்லி

            முதற் பலனாய் சொந்த சம்பத்துமாய்

            மாசில்லா மணவாட்டியாம் சபையாய்

            நேசித்ததெம்மை ஏசு அழைத்தார் - பரன்

 

3.         அஸ்திபார மூலைக்கல் இயேசு

            அவரோடப் போஸ்தலர் மேல் சபையாய்

            ஆவியால் எம்மை இசைவாய் இணைத்தே

            ஆலயமாய் எழுப்புகின்றார் - பரன்

 

4.         பன்னிரு நட்சத்திரங்கள் சூடி

            புது கிருபை தேவ நீதியுடன்

            சூரியனையும் அணிந்தாள் ஜெயமாய்

            சந்திரன் மேல் நிற்கும் சபையே - பரன்

 

5.         ஆதாம் இழந்ததாம் ஏதேனின்

            அழியாமை நித்திய ஜீவனுடன்

            மணாளன் கிறிஸ்துவின் சாயலுடன்

            மறுமையில் விளங்கிடுவோம் - பரன்

 

6.         சீயோனைக் கட்டி முடிப்பாரே

            ஜெயமெடுத்தோரையும் சேர்த்திடவே

            ஆகாயமீதில் ஆரவாரத்தோடே

            அன்பர் இயேசு வருகின்றாரே - பரன்

 

7.         மீட்கப்பட்டோர் ஆனந்தம் பாடி

            அன சஞ்சலம் தவிப்பும் - அகற்றி

            நித்திய மகிழ்ச்சியினால் நிரம்பி

            நீடூழி சீயோனில் ஆளுவோம் - பரன்

 

- சாராள் நவரோஜி

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...