உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் உங்கள்

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் உங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்

                        உங்கள் துன்பம் இன்பமாய் மாறும் - 2

                        மறுபடியும் கர்த்தரைக் கண்டு

                        மகிழுவோம் மகிழுவோம்

                        ஆனந்தம் பாடி சீயோனை நாடி

                        திரும்புவோம் திரும்புவோம்

                        சஞ்சலமும் தவிப்புமோ

                        ஓடிப்போகும் சந்தோஷிப்போம்

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

 

1.         சாயங் காலத்தில் அழுகை தங்கும்

            விடியற் காலத்திலே களிப்புண்டாகும் - 2

            தேவ கோபமோ ஒரு நிமிஷம்

            தேவ தயவோ நீடிய வாழ்வு - 2 - உங்கள்

 

2.         அற்ப காலம் மூண்ட கோபத்தினால்

            இமைப் பொழுது தம் முகம் மறைத்தார் - 2

            ஆனாலும் நித்திய கிருபையுடன்

            கர்த்தர் உனக்கு இரங்கிடுவார் - 2 - உங்கள்

 

3.         கர்த்தருடைய சிட்சைகளை நீ

            அற்பமாக எண்ணாதே சோர்ந்து போகாதே - 2

            எவனிடத்தில் அன்பு கூருகின்றாரோ

            கர்த்தர் அவனை சிட்சித்து தேற்றுவார் - 2 - உங்கள்

 

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=IXkvFGD7yXo

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு