22 March 2024

அந்த நாள் வந்திடும் எந்த நேரத்திலும்

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Text file Download

 

 

 

 

 

                   அந்த நாள் வந்திடும் எந்த நேரத்திலும்

                        ஆவலாய் காத்திருப்பவர்க்காய்

                        ஆண்டவர் இயேசுவே வருகிறார் (2)

 

1.         தாமே தெரிந்தெடுத்த சுத்தரை

            தம்முடன் சேர்த்துக் கொள்ளுவார் - 2

            கூட்டமாய் பக்தர்கள் பறந்திடும் காட்சியே

            என்ன இன்பமே - 2 - அந்த நாள்

 

2.         புத்தியுள்ள கன்னிகை - யாவரும்

            பூரிப்புடன் பிரகாசிப்போம் - 2

            மீட்பின் நாள் சமீபம் நிற்கிறார்

            மீட்பரே வாசலண்டையே - 2 - அந்த நாள்

 

3.         வானம் பூமி மாறிடும் - கர்த்தரின்

            வார்த்தைகள் ஒன்றும் மாறிடா - 2

            நினையா நேரமே வருகிறார்

            நீதியின் ராஜ ராஜனே - 2 - அந்த நாள்

 

- சாராள் நவரோஜி

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...