27 March 2024

தேவ பக்தி ஓர் ரகசியம்

தேவ பக்தி ஓர் ரகசியம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          தேவ பக்தி ஓர் ரகசியம்

            தேவ பக்தி மகா மேன்மையே - 2

 

                        தேவன் மனித சாயலானார்

                        தேடி நம்மை மீட்க வந்தார்

                        மாயை மண்ணாம் நம் சரீரம்

                        மாற்றுவார் மறு வாழ்வடைவோம்

 

1.         தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா (2)

            கர்த்தரின் நாமத்தில் வருகின்றவர்

                        ஸ்தோத்தரிக்கப்பட்டவர்

                        உன்னதத்தில் ஓசன்னா - 2

            ஓசன்னா பாடுவோம் இயேசுவை புகழ்வோம்

            ஓசன்னா இயேசு மரித்துயிர்த்தார்

            ஓசன்னா இயேசு இரட்சிக்கிறார்

            ஓசன்னா இயேசு சுகமளிப்பார்

            ஓசன்னா இயேசு ஆசீர்வதிப்பார்

            ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா (2)

 

2.         மறி மீதில் ஏறி பவனி போனார் (2)

            மரக்கிளை தரித்து வழி நிரப்பி

            வஸ்திரங்கள் விரித்து வரவேற்று துதித்தனர் (2)

                        ஓசன்னா பாடினார் குருத்தோலை ஏந்தினார்

                        ஓசன்னா பாடி கனம் பண்ணினர்

                        ஓசன்னா பாலர் பாடி மகிழ

                        எருசலேம் மனம் திரும்பும் படி

                        இயேசுவோ கண்ணீர் சிந்தினாரே

            ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா (2)

 

3.         விண் வேந்தன் இயேசு வலம் வரும் வேளை (2)

            வன் கண்களால் கண்ட பரிசேயர்

                        உலகமே அவர் பின் செல்ல

                        கலகம் உண்டாக்கினரே - 2

                        ஓசன்னா என்றுமே எல்லோரும் பாடுவோம்

                        ஓசன்னா இயேசு ஜீவிக்கிறார்

                        ஓசன்னா இயேசு வருகிறார்

                        ஓசன்னா இயேசு நேசிக்கிறார்

                        ஓசன்னா இயேசு தேற்றுகிறார்

            ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா (2)

 

- சாராள் நவரோஜி

 

 

https://www.youtube.com/watch?v=Lm1JlSoKLTs

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...