26 March 2024

பரலோக இராஜ்ஜிய வாசி

பரலோக இராஜ்ஜிய வாசி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   பரலோக இராஜ்ஜிய வாசி

                        பரன் இயேசுவின் மெய் விசுவாசி

                        புவி யாத்திரை செய் பரதேசி

                        பரன் பாதம் நீ மிக நேசி

 

1.         ஆபிரகாம் ஈசாக்குடனே

            ஆதிப் பிதாக்கள் யாவருமே - 2

            தேவனுண்டாக்கின மெய் ஸ்தலமே

            தேடியே நாடியே சென்றனரே - 2

            அந்நியரே பரதேசிகளே - பரலோக

 

2.         திரும்பியே பாரோம் மறந்த தேசம்

            தீவிரம் செல்வோம் சுய தேசம் - 2

            தூதர்கள் வாழும் பரம தேசம்

            தூயப் பிதா ஒளி வீசும் தேசம் - 2

            மேலோக பக்தரின் சொந்த தேசம் - பரலோக

 

3.         தனித்தனியே யாத்திரை செல்லுவோம்

            கூட்டங்களாக திரண்டு செல்வோம் - 2

            குடும்பம் குடும்பமாகச் செல்வோம்

            ஜாதி இனங்களும் கூடிச் செல்வோம் - 2

            சேனாதிபதி கர்த்தர் பின் செல்லுவோம் - பரலோக

 

4.         நன்மையும் மேன்மையுமாம் நகரம்

            நல் அஸ்திபார புது நகரம் - 2

            வாக்குத்தத்தத்தின் திட நகரம்

            விசுவாசத்தால் அடையும் நகரம் - 2

            ஏறுகின்றோம் சீயோன் நகரம் - பரலோக

 

5.         சாவுத் துக்கம் அங்கே இல்லையே

            சாத்தானின் சேனை அங்கில்லையே - 2

            கண்ணீர் கவலை அங்கில்லையே

            காரிருள் கொஞ்சமும் அங்கில்லையே - 2

            பஞ்சம் பசி ஒன்றும் அங்கில்லையே - பரலோக

 

6.         வெண் வஸ்திர பவனி நடக்க

            வெண் குருத்தோலை கொடி பறக்க - 2

            பேரிடி ஸ்தோத்திர தொனி முழங்க

            பெரு வெள்ள ஓசைப் பாட்டொலிக்க - 2

            கர்த்தரை காண்போம் கண் ஜொலிக்க - பரலோக

 

7.         பொன் பொருள் வேண்டாம் இயேசு போதும்

            மண் ஆசை வேண்டாம் இயேசு போதும் - 2

            பாவமே வேண்டாம் இயேசு போதும்

            லோகமே வேண்டாம் இயேசு போதும் - 2

            ஆத்தும இரட்சகர் இயேசு போதும் - பரலோக

 

8.         நம்பிக்கை பொங்கப் பாடிடுவேன்

            நல் மனச் சாட்சி நாடிடுவேன் - 2

            இத்தரை யாத்திரை கடந்திடுவேன்

            அக்கரைச் சேர்ந்து வாழ்ந்திடுவேன் - 2

            அந்த தினம் என்று கண்டிடுவேன் - பரலோக

 

- சாராள் நவரோஜி

 

 

https://www.youtube.com/watch?v=JZWXN9qRRUQ

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...