யாரும் காணவில்லையா யாரும்

யாரும் காணவில்லையா யாரும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          யாரும் காணவில்லையா?

            யாரும் கேட்கவில்லையா?

            எண்ண முடியா மனிதர்கள்

            நித்தம் கடந்து செல்கின்றார்

 

                        எங்கே செல்கின்றார் - நீ சொல்

                        எங்கே செல்கின்றார்? - யாரும்

                        இரங்கும் ஐயா - இயேசுவே (3)

 

1.         பசியும் பட்டினியுமாய்

            போர்க்க எதுவும் இன்றியே

            பார்க்க யாரும் இல்லாமல்

            நித்தம் கடந்து செல்கின்றார் - எங்கே

 

2.         ஜெபிப்போர் மறைந்து போனாரோ?

            கொடுப்போர் குறைந்து போனாரோ?

            உழைப்போர் சோர்ந்து போனாரோ?

            நரகலோகம் நிரம்புதே! - எங்கே

 

3.         என்னைத் தந்தேன் தந்தையே

            உண்மை பாரம் இல்லையே

            அர்ப்பணிக்க ஆசையே

            சரணம் ஐயா இயேசுவே - எங்கே

 

- எமில் ஜெபசிங்

 

https://www.youtube.com/watch?v=aCjyZuaE_eA

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு