06 March 2024

தாய் மறந்தாலும் தந்தை மறந்தாலும்

தாய் மறந்தாலும் தந்தை மறந்தாலும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   தாய் மறந்தாலும் தந்தை மறந்தாலும்

                        நீர் எம்மை மறப்பதில்லை - இயேசுவே

                        நீர் எம்மை மறப்பதில்லை - 2

 

1.         பாவங்கள் போக்கி பரகதி சேர்க்க

            பரமனே இந்தப் பாரில் வந்தீர் - 2

            ஆதியுமானீர் ஜோதியுமானீர்

            நினைத்தால் வருகின்ற நீதியுமானீர் - தாய்

 

2.         தாளமுமானாய் ஆகமுமானாய்

            பாவங்களானாய் கீதங்களானாய்

            காவியமானாய் ஓவியமானாய்

            கற்பனையானாய் காட்சியுமானாய் - தாய்

 

3.         அசைகின்ற பொருளானாய்

            அமைதியின் நிழலானாய்

            உயிருக்குள் உயிரானாய்

            உலகத்தின் நிலவானாய் - தாய்

 

4.         அறிவுக்குத் தலையானாய்

            அன்புக்கு உறவானாய்

            அற்புத தேவனானாய் - நீ

            அல்லும் பகலுமானாய் - தாய்

 

 

https://www.youtube.com/watch?v=CpTgzyvndHE

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...