காலங்கள் கடந்திட நாட்களும் நெருங்குதே

காலங்கள் கடந்திட நாட்களும் நெருங்குதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   காலங்கள் கடந்திட நாட்களும் நெருங்குதே

                        கர்த்தர் நம் இயேசுவே விரைவுடன் வந்திடுவார் - 2

 

1.         அக்கிரமம் மிகுதியால் அன்பு மிக குறைந்திடுதே

            அளவில்லா ஆதியன்பு மாய்ந்து போகிறதே

                        எக்காள தூதங்கனங்களோடு வேகம்

                        இயேசுதாம் வந்திடுவார் - 2 - காலங்கள்

 

2.         கள்ள அப்போஸ்தலர் கள்ள தீர்க்கதரிசிகளும்

            மெள்ள வந்தங்கும் எங்கும் தோன்றுகின்றனரே

                        அநேகர் உள்ளம் எல்லாம் சோர்ந்திடுதே

                        அன்பர்தாம் வந்திடுவார் - 2 - காலங்கள்

 

3.         விசுவாசம் பூமியில் வேகம் அற்றுப் போகிறதே

            விசுவாச துரோகம் எங்குமே வெளிப்படுதே

                        தம்மண்டை தூய பக்தரை சேர்க்க இயேசு

                        தவறாமல் வந்திடுவார் - 2 - காலங்கள்

 

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=mSdWca2Ryzs

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு