ஆசை என் இயேசு ராஜனார் வாசலில் நிற்கின்றார்
வானகம் பெற்ற தாசரை வானிலே மேவுவார்
வாஞ்சித்த நாயகா என பாடி மகிழ
பாதகரான யாவரும் பயந்தொளிந்திட
வான் எக்காளமே தொனித்திடுமே
நான் அந்நேரமே ஜொலித்திடுவேன்
1. மின்னொளி வீசிடும்மாப்போல் சீற்றன் இறங்குவார்
மின்னொளி தூதரானோரும் சங்கீதம் பாடுவார்
இந்நில பக்தரானோரும் இன்புற்று ஆடுவார்
சிற்றின்பத்தார் யாவோரும் சிதைந்து மாளுவார்
- வான்
2. செல்லாத காலம் நீளுமே செங்கோல் மலரவே
எல்லா மறைப்பொருளுமே வெளி வந்தாகுமே
மேன்மை எனக்கு கிட்டுமே இம்மையும் மாறுமே
என் துக்கம் துன்பம் யாவுமே இல்லாமல் போகுமே
- வான்
No comments:
Post a Comment