இணையில்லா நாமம் இயேசுவின் நாமம்

இணையில்லா நாமம் இயேசுவின் நாமம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                        இணையில்லா நாமம் இயேசுவின் நாமம்

                   இன்பமே தங்கும் இதயமே பொங்கும்

                        இன்னல்கள் தீரும் என் மனம் மாறும்

                        இன்பமே தங்கும் இதயமே பொங்கும்

                        இன்னல்கள் தீரும் என் மனம் மாறும்

 

1.         லோகத்தின் ஆசை வெறுத்திடும் நாமம்

            லோகத்தை மீட்கும் இயேசுவின் நாமம்

            ஜீவனைக் கொடுத்த இரட்சகர் நாமம்

            ஜீவனோடெழுந்தவர் நாமம்

            அதை யார் மறைத்திடுவார் மனுக்குல விளக்கே

            அணைந்திடா ஒளி திருநாமம் - இணையில்லா

 

2.         அண்டிடுவோரை அணைத்திடம் நாமம்

            அன்பின் சொரூபி இயேசுவின் நாமம்

            வேண்டுதல் கேட்கும் வல்லவர் நாமம்

            வேதனை தாங்கிடும் நாமம்

            இதை நம்பியே வாரும் பாவங்கள் தீரும்

            இன்றும்மை அழைத்திடும் நாமம் - இணையில்லா

 

3.         அழியாமை ஜீவன் அளித்திடும் நாமம்

            அற்புதம் செய்யும் இயேசுவின் நாமம்

            விண்ணுலகினிலே சேர்த்திடும் நாமம்

            மண்ணுலகோர் நம்பும் நாமம்

            மிகச் சீக்கிரம் வருவேன் என்று வாக்குரைத்த

            மீட்பர் நல்மேய்ப்பரின் நாமம் - இணையில்லா

 

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=RFqBZ7qRfsw

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு