16 March 2024

மகிமை இயேசு தேவா

மகிமை இயேசு தேவா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   மகிமை ஏசு தேவா

                        மறவாதீர் என்னை நாதா

                        வழி நீரே அக்கரை சேர

                        வலங்கையில் தாங்கிச் செல்லும்

                        வழுவாமல் என்னைக் காரும்

 

1.         இருள் சூழ்ந்த பாதைகளிலும்

            இடறாமல் பயந்திடாமல்

            தேவ ஜோதி தூதர் சூழ

            துணை நின்றென்னை தேற்றுவீரே

 

2.         பெரும் மலைகள் விலகினாலும்

            பர்வதங்கள் நிலை பெயர்ந்தும்

            சமாதானம் நீங்கிடாமல்

            சதா காலம் கிருபை கூரும்

 

3.         இந்த லோகம் எனது பின்னே

            எந்தன் வாழ்வில் சிலுவை முன்னே

            இலக்கை மாத்ரம் நோக்கி செல்வேன்

            இயேசு போதும் நீரே என் லாபம்

 

4.         கனிமரமாய் செழிக்கும் என்மேல்

            கல்லெறியும் பகைஞர் முன்னில்

            பெலன் தாரும் இன்னும் ஒங்க

            பலன் நூறாக ஆசீர் கூறும்

 

5.         பிணம் எங்கே கழுகு கூடும்

            உணராமல் மனிதர் மாளும்

            கொடிய கடைசி காலம்

            கைவிடாமல் கொண்டென்னைச் சேரும்

 

6.         ஆவி, ஆத்மா, தேகம் முழுதும்

            அன்பர் இயேசுவின் சொந்தமாமே

            பூரணம் அருளும் ஆயத்தப்படுத்தும்

            பாடிப்பறந்திடுவேன் - தம் ஆவியினால்

 

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=NaQYLtDLN2M

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...