04 March 2024

இயேசுவோடு இணைந்த வாழ்வினை

இயேசுவோடு இணைந்த வாழ்வினை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   இயேசுவோடு இணைந்த வாழ்வினை

                        தேடி தெரிந்துக் கொண்டேன்

                        இதுவே தூய தேவ அன்பே - போதும்

                        மாய உலகினிலே - போதும்

                        தூய தேவ அன்பே

 

1.         மனித அன்பு மாறி மறையும்

            மாறிடாத தேவ அன்பே - 2

            இணையில்லாத நல்ல பங்கே

            இதற்கு நிகர் எதுவும் இல்லையே

            இம்மை மறுமையிலே - இயேசுவோடு

 

2.         பஞ்சமோ பசி பட்டயமோ

            மிஞ்சும் துன்பம் தொல்லை வந்தும் - 2

            கிறிஸ்துவின் அன்பை விட்டென்றென்றும்

            பறித்துப் பிரித்திடாதே

            என்னையும் பரமன் கைவிடாரே - இயேசுவோடு

 

3.         உலக ஆசை பாவம் பெருக

            உண்மை நேர்மை எங்குமில்லை - 2

            இதனை காணும் நீதிமான்கள்

            இதயம் நொறுங்கிடுதே

            தினமும் கதறி ஜெபித்திடவே - இயேசுவோடு

 

4.         எனது ஆவி ஆத்மா தேகம்

            இயேசு சொந்தமாகக் கொண்டார் - 2

            மரணமோ என் ஜீவனோ நான்

            மகிமை மேல் மகிமை அடைந்தே

            மகிபன் முகம் காண்பேன் - இயேசுவோடு

 

https://www.youtube.com/watch?v=SeyNbsUWhGQ

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...