ஆர்ப்பரித்தென்றும் அகம் மகிழ்வேனே
ஆனந்தமாய் பாடுவேன்
ஆண்டவர் அடியாருக் கருளிய
அளவிலா ஆசிகளை நினைத்தே -
2
நான் புகழ்ந்திடுவேன் அவர் நாமத்தையே
என் ஆவல் தீர நிதம் பாடிடுவேன்
ஒப்பில்லாத நேசரின் திருநாமம் அரணே
எப்போதும்
தங்கும் புகழிடமே - 2
1. கண்மணிபோல கடந்த நாட்களிலே
கருத்தாய் பாதுகாத்தனரே
காற்றையும் கடலையும் கடந்து
நான் சென்றிட
கிருபை ஈந்ததினால் - 2 - நான்
2. பலவித நாசம் பயங்கர மோசம்
பலமாய் சோதனை சூழ்கையிலே
பரீசுத்தமாகப் பாதையில் ஓடிட
பரனேசு செய்ததினால் - 2 -
நான்
3. திகையாதே நான் உன் தேவன் என்றுரைத்தே
திருவாய் மலர்ந்தென்னை தேற்றினாரே
திசையறியாது தியங்கும் என்
பாதையில்
தீபம் என் இயேசுதானே - 2
- நான்
4. அன்பரின் இன்ப நாமத்தை புகழ
ஆயிரம் நாவுகள் போதுமோ
ஆதியும் அந்தமும் ஆச்சரியமே
இவர் நீதியின் சூரியனே -
2 - நான்
No comments:
Post a Comment