07 March 2024

இயேசுவின் ஆலய மணி ஓசை கேட்டு

இயேசுவின் ஆலய மணி ஓசை கேட்டு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                        திவ்விய ஸ்பிரித்து சாந்துவே!!!

                        தேவரீர் எழுந்தருளி வாரும்!!!

                        உமது ஞான கதிர்களை வரவிடும்!!! (2)

 

          இயேசுவின் ஆலய மணி ஓசை கேட்டு

            இதயம் குளிருதாடா

            நெஞ்சில் இன்பம் பிறக்குதடா - 2

                        நெஞ்சில் இன்பம் பிறக்குதடா..

 

1.         ஆலயத்துள்ளே ஆண்டவன் உருவம்

            ஆளை இழுக்குதடா

                        அதில் அடைக்கலமான உயிர்களின்

                        கொடிய பாவத்தை அழிக்குதடா - 2 - இயேசுவின்

 

2.         அமைதியின் இருப்பிடம் அறிவின் பிறப்பிடம்

            அங்கே தெரியுதடா

                        இயேசு வழியினில் பயணம் செல்பவன்

                        வாழ்வில் எல்லாம் புரியுமடா - 2 - இயேசுவின்

 

3.         கருணையின் வடிவம் கர்த்தரின் உருவம்

            கண்ணுக்கு தெரியுதடா

                        இயேசு மனித குலத்திலே பிறந்ததனால்

                        இந்த மண்ணுக்கு பெருமையடா - 2 - இயேசுவின்

 

4.         மன்னிக்க தெரிந்த இயேசுவின் இதயம்

            மரகத வாசலடா

            இயேசு மகனை ஈன்ற மரியாள் வாழும்

            மாதா கோயிலடா

            இது மாணிக்க கோயிலடா.

            இது மாதா கோயிலடா

 

 

https://www.youtube.com/watch?v=RBg76FGWwRg

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...