தொடர்ந்து
செல்லுங்கள் வீரர்காள்
தூயர்
இயேசு நாதரின்
பின்னே
தேவனின்
சர்வாயுதத்தை
துரிதமாய்
அணிந்துக் கொண்டு
தந்திரப்
பிசாசை எதிர்ப்போமே
1. மாம்சத்தோடும்
இரத்தத்தோடும்
அல்ல
இம்மாய
லோக துரைத்தனத்தோடும்
அதிகாரங்களோடும்
பொல்லா ஆவியோடும்
ஆதிக்கங்களோடும்
நாம் போராடுவோம்
- 2
தொடர்ந்து
செல்லுங்கள் வீரர்காள்
2. சத்தியம்
என்னும் கட்சை
அறையில் அணிவோம்
நல் நீதி
என்னும் மார்க்கவசம்
தரிப்போம்
ஆயத்தம்
என்னும் பாதரட்சை
கொள்வோம்
தூய விசுவாசம்
நம் கேடகமாம்
- 2
தொடர்ந்து
செல்லுங்கள் வீரர்காள்
3. இரட்சணியம்
என்னும் தலைச்சீரா
அணிவோம்
தேவ வசனமதின்
பட்டையத்தைப்
பிடிப்போம்
விண்ணப்பங்களோடு
நித்தம் ஜெபம்
செய்து
உறுதியோடு
விழித்து நாம்
போராடுவோம் - 2
தொடர்ந்து
செல்லுங்கள் வீரர்காள்
https://www.youtube.com/watch?v=A7o87UiC1Oc
No comments:
Post a Comment