கண்ணீரைக் காண்பவர் இயேசு

கண்ணீரைக் காண்பவர் இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   கண்ணீரைக் காண்பவர் இயேசு

                        உன் விண்ணப்பம் கேட்பவர் இயேசு

                                    கர்த்தர் உன்னைக் கைவிட மாட்டார்

                                    கர்த்தர் உன்னை விட்டு விலகவே மாட்டார் - 2

                                    மனம் கலங்காதே சேர்ந்து போகாதே

                                    தினம் ஜெபம் செய்வாய் திடமனதாய் - 2 - கண்ணீரைக்

 

1.         அற்ப விசுவாசம் அகற்றிடுவாயே (2)

            ஆண்டவர் அதிசயம் உனக்குச் செய்வாரே

                        கிருபையும் நன்மையும் உன்னைத் தொடரும்

                        கர்த்தரோ நல்லவர் கவரைப்படாதே - 2 - கண்ணீரைக்

 

2.         ஏன் இந்த சோதனை எனக்கு வந்தது என்று (2)

            இயேசுவை கேள்விகள் கேட்டிடாதே நீ

                        பொன்னைப் போல் உன்னை புடமிட்ட போதும்

                        பசும் பொன்னாய் மாற்றுவார் பொறுமையாய் காத்திரு - கண்ணீரைக்

 

3.         ஆபத்துக் காலத்தில் பொருத்தனை துதி செய் (2)

            ஆண்டவர் நாமத்தை மகிமைப் படுத்துவாய்

                        கூப்பிடும் எழியோன் சிறுமைப்பட்டோனை

                        கர்த்தரே விடுவிப்பார் சாட்சி நீ கூறுவாய் - 2 - கண்ணீரைக்

 

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=cSvw1mGpP1Y

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு