பரனேசுவை நாம் போற்றி துதித்திடவே
பரனேசுவை
நாம் போற்றி துதித்திடவே
பதினாயிரம்
நாவுகள் போதா
- 2
கர்த்தர்
நமக்குச் செய்த
உபகாரங்களை
நாம்
கணக்கிட்டால்
அவை எண்ணிலடங்கா
- 2
கோடா
கோடி துதிபாடி
கர்த்தரை
நாம் ஆராதிப்போம்
- 2
1. தேவ சபையில்
இன்னிசை கீதங்கள்
துதிப்
பாடல்கள் முழங்கிட
- 2
அளவற்ற
தேவ அன்பை நினைத்து
நாம்
அகமகிழ்ந்திடுவோம்
ஆனந்திப்போம்
- 2
2. ஏகமனதாய்
ஏகசிந்தையாய்
இயேசுவின்
பாதம் பணிகிறோம்
- 2
தேவப்
பிரசன்னம்
பனி போல் இறங்க
தேவ ஆசீர்வாதங்கள்
பெருகுதே
- 2
3. ஆவியோடும்
உண்மையுடனும்
அன்பின்
தேவனை தொழுகிறோம்
- 2
பரிசுத்தம்
என்னும் அலங்காரத்துடன்
பயபக்தியோடும்
நாம் வணங்குவோம்
- 2
4. கர்த்தர்
வார்த்தை உன் வாயில்
அருளி
கரத்தில்
நிழலால் மறைக்கின்றார்
- 2
என் ஜனமென்று உன்னை
அழைக்கின்றார்
எழும்பிடு
சீயோனே பெலன்
பெற்றாய் - 2
5. காத்து
தவிக்கும் கற்புள்ள
கன்னிகை
கறை திறையற்ற சபையோரை - 2
பிரதான
மேய்ப்பன் பேர்
சொல்லி அழைப்பார்
பரலோகம்
பறந்தே சேர்ந்திடுவோம்
- 2
- சாராள்
நவரோஜி
https://www.youtube.com/watch?v=9LTxOV6Z6bw
Comments
Post a Comment