வாசல்களே உங்கள் தலைகளை

வாசல்களே உங்கள் தலைகளை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   வாசல்களே உங்கள் தலைகளை - நல்

                   வாஞ்சையுடனே உயர்த்திடுங்கள் - 2

                        அனாதி கதவுகளே உயர

                        அனாதி தேவன் உட்பிரவேசிப்பார் - 2 - வாசல்களே

 

1.         சேனைகளின் கர்த்தர் இவர்தானே

            சேனாதிபதியாய் வந்தாளுவார்

                        யுத்தத்தில் வல்லவர் மாறா மகிபனே

                        யூதாவின் ராஜா உட்பிரவேசிப்பார் - 2 - வாசல்களே

 

2.         உள்ளமதிலே மாசில்லாதவன்

            உண்மை பரிசுத்த கைகளுடன்

                        மாயை கபடுள்ள ஆணை அகற்றியே

                        மா தேவனோடே உட்பிரவேசிப்பான் - 2 - வாசல்களே

 

3.         கர்த்தர் சமூகத்தை நாடுகின்ற

            பக்தனாம் யாக்கோபு சந்ததியே

                        தேடி விசாரித்து தேவநீதி பெற்று

                        தேவாசீரோடே உட்பிரவேசிப்பான் - 2 - வாசல்களே

 

4.         தடை அகற்றும் தளகர்த்தரே

            தீவிரமாக நம் முன் செல்கின்றார்

                        வாசல் வழியே தம் பின் சென்று ஏகியே

                        வீரமுடனே உட்பிரவேசிப்போம் - 2 - வாசல்களே

 

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=FQYurIthDl8

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு