அழாதே என் மகனே அழாதே என் மகளே
ஆற்றுகிறார் தேற்றுகிறார்
ஆண்டவர் பேசுகிறார்
உன்னுடனே ஆண்டவர் பேசுகிறார்
- 2
1. பிறக்கையில் என்ன கொண்டு வந்தாய்
இறக்கையில் என்ன கொண்டுப்போவாய் - 2
கலங்கிடாதே சோர்ந்து போகாதே
கர்த்தரே உன் கண்ணீர் யாவும் துடைக்கின்றார்
- 2 - அழாதே
2. குயவனின் கையில் களிமண் போல்
கர்த்தர் சித்தம் செய்ய உன்னை ஒப்புவி
- 2
கர்த்தர் கொடுத்தார் கர்த்தர் எடுத்தார்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஏறெடுப்பாய்
- 2 - அழாதே
3. பரலோக பூலோகக் குடும்பம்
பரமன் சமூகம் ஒன்று சேர்வோம் - 2
ஆமென் இயேசுவே வேகம் வாருமே
ஆனந்தநாள் எப்போ வரும் ஏங்குகின்றோம்
- அழாதே
- சாராள் நவரோஜி
No comments:
Post a Comment