22 March 2024

என்று உம்மை காண்பேன்

என்று உம்மை காண்பேன்

                   என்று உம்மை காண்பேன்

                        எனதேசு ராஜா

                        எப்போ நீர் வருவீர் என் தேவா

                        தினமும் ஏங்கிடுதே எந்தன் உள்ளம்

                        திரும்பி இயேசுவே வேகமே வாரும்

                        ஆமென் இயேசுவே வேகமே வாரும் - என்று                 

 

1.         கோதுமை மணிபோல் நிலத்தினில் விழுந்தே

            கர்த்தமே உமக்காய் வாழ்க்கையை வெறுத்தே - 2

            ஜீவ பலியாக சாக உம்முடன்

            சிலுவை அனுதினம் சுமந்து செல்கின்றேன் - 2 - என்று

 

2.         நிந்தையை சுமப்பேன் சிலுவையை சகிப்பேன்

            நிச்சயம் இதற்கும் பலன் மிகுதியுண்டே - 2

            அதி சீக்கிரம் நீங்கும் துன்பம்

            சீயோனில் அதிக நித்ய கன மகிமை கிடைக்கும் - 2 - என்று

 

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=qSw-LftEm8U

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...