எம்மை ஜீவபலியாய்த் தந்தோம்
எம்மை
ஜீவபலியாய்த்
தந்தோம் - ஏசையா
எமதுள்ளம்
நிறைந்தளித்தோமே
- என்று
1. பலிபீட
கொம்பினில்
இணைத்தீரல்லோ
பலவீனர்
பெலன் கொண்டு எழும்பிடுவோம்
பிரகாசித்திட
தயை பெற்றிட (2)
பரன்
பாதம் தாழ்த்தினோம்
இறங்கிடுமே
- தேவா
2. குயவனின்
கைகளில் களிமண்ணைப்
போல்
குறை நீக்கி
வனைந்தெம்மை
உருவாக்குவீரே
உமது சித்தம்
எமது பாக்யம்
(2)
உம்மை நம்பி
தந்தோமே கிருபை
கூருமே - தேவா
3. எமதாவி
ஆத்துமா சரீரம் எல்லாம்
எமக்கல்ல
உமக்கென்றும்
உரித்தாக்கினீரே
பிழைதீருமே
பரிசுத்தரே (2)
அழைத்தவர்
நடத்துவீர்
கடைசிவரை - தேவா
4. விசுவாச
சோதனை புடமிடவே
விசுவாசம்
பெருகிட பரிந்துரைத்தீரே
சுகம் தந்தீரே
ஜெயமீந்தீரே
(2)
இகத்தினில்
நீரே எம் பரிகாரியே
- தேவா
5. பரிசுத்த
பூரண மகிமையுடன்
பரமனின்
திருசாயல்
அடைந்திடுவோமே
தரிசனமே
அளித்திடுமே
(2)
தமதன்பின்
ஆவியைப் பொழிந்திடுமே
- தேவா
6. ஜெயங்
கொண்ட தாசர்கள்
பறந்திடவே
ஜொலித்திடும்
மணவாளன் வருகையின்
நாளே
ஜெபத்துடனே
விழிப்புடனே
(2)
ஜெகத்தினில்
காத்தென்றும்
தவிக்கின்றோமே
- தேவா
- சாராள்
நவரோஜி
https://www.youtube.com/watch?v=eiNtReOI0Mg
Comments
Post a Comment