உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலமும்

உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலமும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலமும்

            உயிரோடெழுந்தேன் இதோ

            ஜீவிக்கிறேன் என்றாரே - இயேசு (2)

 

                        சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரி

                        துதியே கனமே மகிமை செலுத்து!

                        என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்!

                        ஆமென் அல்லேலூயா!

 

1.         வாக்கு மாறாதவரே - இயேசு

            சொல் தவறாதவரே - 2

            சொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே - சீயோனே

 

2.         சுத்த திருச்சபையே பறை

            சாற்றிடு நற்செய்தியை - 2

            சாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார் - சீயோனே

 

3.         பாலகர் வாயினிலே - துதி

            பாடல்கள் முழங்குதே - 2

            போற்றிப் பாடும் வாயை அடக்கக் கூடாதே - சீயோனே

 

4.         தள்ளினோம் ஆகாதென்றே - ஆனார்

            தலைக்கு மூலைக்கல்லாய் - 2

            ஸ்திரமாய் கர்த்தர் மேல் வாழ்க்கையைக் கட்டுவோம் - சீயோனே

 

5.         அன்றாடகம் என்னுடன் - பேசி

            அன்பாய் விசாரிக்கின்றார் - 2

            என்னோடு ஜீவிக்க இயேசு உயிர்த்தாரே - சீயோனே

 

6.         நம்பிக்கையுள்ள வல்ல - ஜீவ

            நல்ல மார்க்கமிதுவே - 2

            நாமும் உயிர்த்து நம் கர்த்தரைச் சேருவோம் - சீயோனே

 

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=c1FIW1bW9PY

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு