27 March 2024

தேவன் தங்கும் வாசஸ்தலம்

தேவன் தங்கும் வாசஸ்தலம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   தேவன் தங்கும் வாசஸ்தலம்

                        துதி ஸ்தோத்திரம் சமாதானம்

                        தேவ மகிமை நிறைந்ததுவே

                        எமதுள்ளம் தேவனின் ஆலயமே

 

1.         இயேசுவின் தூய இரத்தத்தினால்

            இன்றும் அவர் உபதேசத்தினால்

            பரிசுத்த ஆவியால் எமதகமே

            பங்கமில்லா தூய்மை அடைந்திடுமே

 

2.         சத்திய ஆவியானவரே

            செம்மை இதயத்தில் வாசம் செய்வார்

            ஜெய ஜீவியம் நித்தம் ஓங்கிடுமே

            சிங்காசனம் பெற்று வாழ்ந்திடுவோம்

 

3.         சத்துருவை நம் பாதத்தின் கீழ்

            சீக்கிரம் தாழ்த்திடும் காலம் வரை

            வலது பாரிசத்தில் வீற்றிருப்பார்

            வெற்றி அளித்தெம்மை சேர்ந்திடுவார்

 

4.         அன்பினிமித்தம் கெம்பீரித்தே

            ஆண்டவர் நம்முடன் சந்தோஷித்தே

            நம் நடுவே தேவன் அமர்ந்திருப்பார்

            நம் மனம் பூரித்து பாடிடுவோம்

 

5.         பற்பல பாஷை பேசிடுவோம்

            தற்பரன் ஆவி எம்மை நிரப்பும்

            இதுவே அவர் தரும் இளைப்பாறுதல்

            இன்றும் தேவ ஆவி ஊற்றிடுவார்

 

6.         அன்பின் குமாரன் இராஜ்ஜியத்தில்

            அன்பராம் இயேசுவே ஆண்டிடுவார்

            அவருடன் சீயோன் மலை மீதிலே

            அற்புதமாய் நம்மை நிறுத்திடுவார்

 

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=-kvQQ-Fgl2w

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...