08 March 2024

அன்பின் தேவன் இயேசு உன்னை இன்றே

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அன்பின் தேவன் இயேசு உன்னை இன்றே அழைக்கின்றார்

                        அவர் உன்னை அழைக்கின்றார்

                        உன் துன்பம் துயரம் கவலை நீக்க இன்றே அழைக்கின்றார்

                        உன்னை அழைக்கின்றார்

 

1.         இரத்தம் தோய்ந்த கைகளைக் கண்டு சித்தம் தெரியாயோ

            நித்தம் ஆணி பாய்ந்த காலை முத்தம் செய்யாயோ

            உத்தமர் இயேசு உந்தனுக்காக இத்தனை வாதையோ

            சத்திய நாதர் சத்தமாய் அழைக்கும் சத்தம் கேளாயோ

 

2.         பேயின் கட்டு உலக மாயை எல்லாம் விரைந்தோடும்

            நோயின் வாடை பார சுமைகள் சொல்லால் பறந்தோடும்

            தாயின் பாசம் சேயின் நேசம் ஒருநாள் மறைந்தோடும்

            ஆயின் வாக்கு மாறா இயேசு அன்போ வழிந்தோடும்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...