12 March 2024

அரியதோர் செய்தி பெற்றோம்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அரியதோர் செய்தி பெற்றோம்

            பெரியதோர் பொறுப்பும் ஏற்றோம்

            தெரிந்தவர் கூறாவிட்டால்

            தெரியாதோர் அறிவதெங்கே?

 

                        அங்கே ஆயிரம்

                        அறுவடை ஆயிரம்

                        இங்கே இயேசுவே

                        அடியவர் ஆயத்தம்

 

1.         ஒன்றும் இல்லார் அதிகம் உண்டு

            உண்டு களிக்க காலம் இல்லை

            பங்குகளை அனுப்பவேண்டும்

            எங்கும் மகிழ்ச்சி காணவேண்டும் - அங்கே

 

2.         கண்ணீரோடு விதைத்த விதைகள்

            நல்ல நிலத்தில் விழுந்த விதைகள்

            சிறுக விதைத்தால் சிறுக அறுப்போம்

            பெருக விதைத்தால் பெருக அறுப்போம் - அங்கே

 

3.         ஆதி சபைகள் கண்ட வளர்ச்சி

            அடியார் பணியில் காணச் செய்யும்

            அப்போஸ்தலர்கள் பெற்ற முதிர்ச்சி

            அடியேன் வாழ்வில் விளங்கச் செய்யும் - அங்கே

 

- எமில் ஜெபசிங்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...