கர்த்தருக்குப்
பிரியமானவர்களே,
பரமபிதாவானவர்
அருளிச்செய்த
பத்து கட்டளைகளையும்,
அதன் விளக்கத்தையும்
பரமபிதாவின்
கிருபையால் உங்கள்
இதய வாசலுக்கு
மிகப் பணிவன்புடன்
அனுப்புகிறேன்
உயர்வான
பரமப்பிதா
கிருபையாலே
உருவான
கற்பனையின்
மகிமையாலே
அறிவுடைய
மனிதகுளம்
இங்கு வாழ
அளந்து
சொன்ன பொன்மொழிகள்
கேட்க வாரீர்
பாவிகளுக்காகப்
பாடுப்பட்ட
பரமப்பிதாவின்
கட்டளைப்
பத்து
பெரும்
பரந்த உலகத்தில்
சிறப்புடன்
வாழ வைத்திடும்
ஞான முத்து
பேசும்
மனித வாழ்க்கையின்
சொத்து
1. முதல்
கட்டளை
என்னையன்றி
உனக்கு வேறே தேவர்களை
உண்டாக்க வேண்டாம்
பலவழி
செல்லும் மனிதரை
ஒருநிலைப்
படுத்தவே
நல்வழிச்
சொன்னார்
மனித இனவழி ஒன்றே
இறைவன் ஒன்றே
என்று அவர்
மார்க்கம் சொன்னார்
என்று மார்க்கம்
சொன்னார்
2. இரண்டாம்
கட்டளை
மேலே
வானத்திலேயும்
கீழே பூமியிலேயும்
பூமியின்
கீழ் தண்ணீரிலேயும்
உண்டாயிருக்கிற
அவைகளுக்கொப்பான
ஒரு சொருபத்தையானாலும்
யாதொரு விக்கிரகத்தையானாலும்
நீ உனக்கு
உண்டாக்க வேண்டாம்
நீ அவைகளை
நமஸ்கரிக்கவும்
சேவிக்கவும்
வேண்டாம்.
வெளுத்ததெல்லாம்
பசும் பால் என
என்னும்
பழக்கத்தில்
மூழ்கிவிடாதே
கையில்
விளக்கிருந்தும்
கிணற்றில்
விழுந்தவன் கதைபோல்
ஆக்கிட
நீ துணியாதே
என்று மார்க்கம்
சொன்னார்.
3. மூன்றாம்
கட்டளை
உன் தேவனாகிய
கர்த்தருடைய நாமத்தை
வீணிலே வழங்காதிருப்பாயாக.
தேவனை வழிப்படும்
முறைகளை மறந்து
அழைந்தவர்
உலகத்தில் பலருண்டு
இது தெரிந்து
நடக்காமல்
தேவநாமத்தை
ஜெபிப்பதினால்
என்ன பலனுண்டு
சிந்தனை
செய்திடு இன்று
இதுவே மனிதனின்
தொண்டு
என்று மார்க்கம்
சொன்னார்
4. நான்காம்
கட்டளை
ஓய்வுநாளை
பரிசுத்தமாய்
ஆசரிக்க நினைப்பாயாக.
உழைப்புக்கு
ஆறு நாட்களை ஒதுக்கி
ஓய்வுகொள்
மறுநாள் வேளையிலே
மன களிப்புடன்
பரிசுத்த நிலையுடன்
தேவனை
வழிபடு
ஞாயிற்றுக் கிழமையிலே
நலம்பெருவாய்
உன் வாழ்க்கையிலே
(2)
என்று மார்க்கம்
சொன்னார்
5. ஐந்தாம்
கட்டளை
உன் தேவனாகிய
கர்த்தர் உனக்கு
கொடுக்கும் தேசத்திலே
உன் நாட்கள்
நீடித்திருப்பதற்கு
உன் தகப்பனையும்
உன் தாயையும் கனம்
பண்ணுவாயாக
உண்மையில்
அன்னை தந்தையை
சொந்த கண்போல் காப்பது
அறிவுடைமை
மேலும்
அன்பாய் இருப்பது
ஒரு கடமை
என்று அன்பாக
கூறும் கர்த்தாவின்
வார்த்தையை
அறிந்து
நடந்தாலே
நன்மை
தரும் அனுபவம்
வாழ்க்கையின்
உண்மை
என்று மார்க்கம்
சொன்னார்
ஞான மார்க்கம்
சொன்னார்
6. ஆறாம்
கட்டளை
கொலை செய்யாதிருப்பாயாக
ஆறறிவு
உள்ளவர்க்கு
மன ஆத்திரமே
பொல்லாது
தேவ வாக்கியத்தைப்
படிப்பவர்க்கு
தீய கொலை கூடாது
இழி தொழிலாம் கொலை
தொழிலை செய்வதினாலே
வாழ்வில்
இனிப்பும்
கசப்பும்
இரண்டும் இன்றி
போகும் தன்னாலே
இதை எண்ணிப்
பார்த்து உண்மை
வழி காண்பதினாலே
நன்மை இருக்குதுப்பார்
உலகத்திலே நீதி
முன்னாலே
என்று மார்க்கம்
சொன்னார் ஞான மார்க்கம்
சொன்னார்
7. ஏழாவது
கட்டளை
விபச்சாரம்
செய்யாதிருப்பாயாக
விபரச்சாரம்
பெறுங்குற்றம்
மறக்கக்கூடாது
கர்ப்பை
விலையாகும்
பொருளாக நினைக்கக்கூடாது
தவறான வழியில்
ஆண் பெண் நடக்கக்கூடாது
கால சந்தைக் கடை
பொம்மைப்போல
வாழக்கூடாது
என்று மார்க்கம்
சொன்னார், ஞான
மார்க்கம் சொன்னார்.
8. எட்டாவது
கட்டளை
களவு செய்யாதிருப்பாயாக
அழுது பிறந்த
மனிதனுக்குக்
கவலைக்கூடாது
அந்த கவலைத் தீர
உழைத்து வாழ மறக்கக்கூடாது
கொடிய களவு
தொழிலை செய்து
வாழ நினைக்கக்கூடாது
என்று கர்த்தர்
சொன்ன பொன்மொழியை
மறக்கப்படாது
என்று மார்க்கம்
சொன்னார், ஞான
மார்க்கம் சொன்னார்.
9. ஒன்பதாம்
கட்டளை
பிறருக்கு
விரோதமாய் பொய்ச் சாட்சி
சொல்லாதிருப்பாயாக
மனசாட்சி
ஒரு பக்கம் இருந்திடும்
போது
அதற்கு
மாறாக பொய்ச்
சாட்சி சொல்லக்கூடாது
கனி இருக்க
காய் கவரும் பழக்கம்
கூடாது
பிறர்க்கு
கவலையாகும்
கோணல் வழியில்
நடக்கக்கூடாது.
என்று மார்க்கம்
சொன்னார், ஞான
மார்க்கம் சொன்னார்.
10. பத்தாவது
கட்டளை
பிறனுடைய
வீட்டை இச்சியாதிருப்பாயாக
மனிதன்
பிறந்து அழிந்ததெல்லாம்
ஆசையினாலே (2)
மண் ஆசையினாலே,
பெண் ஆசையினாலே,
உன் ஆசையினாலே
பேசும்
மனிதன் வாழ நீதி
கூறும் பத்துக்
கட்டளை
இது மாசில்லாத
பரமப்பிதா
கூறும் கட்டளை
இதுவே பத்துக்
கட்டளை, இதுவே
பத்துக் கட்டளை
https://www.youtube.com/watch?v=Pk6zQLEwhtE
No comments:
Post a Comment